Posts

Showing posts from December, 2023

தன்னந் தனி நின்றது

தன்னந் தனி நின்றது, தான் அறிய இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ? - அருணகிரிநாதர்    s   CC கந்தர் அநுபூதி

அறக் கதிகெட்டு...

மதிகெட்டு அறdxவாடி, மயங்கி, அறக் கதிகெட்டு, அவமே கெடவோ கடவேன்? - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி 

குருவாய் வருவாய்

உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி 

அறிவு ஒன்று அற நின்று

அறிவு ஒன்று அற நின்று, அறிவார் அறிவில் பிறிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ? செறிவு ஒன்று அற வந்து, இருளே சிதைய வெறி வென்றவரோடு உறும் வேலவனே. - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி 

ஆறு ஆறையும் நீத்து

ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப் பேறா அடியேன், பெறுமாறு உளதோ? - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி

மெய்ப் பொருள் ஈகுவையோ?

கரவாகிய கல்வி உளார் கடை சென்று இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ? - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி 

பேசா அநுபூதி

ஆசா நிகளம் துகளாயின பின் பேசா அநுபூதி பிறந்ததுவே. - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி 

அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே

குறியைக் குறியாது குறித்து அறியும் நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும் செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே. - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி 

என்று முடிந்திடுமோ

மாஏழ் சனனம் கெட மாயைவிடா மூஏடணை என்று முடிந்திடுமோ - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி

அரிவாய் அகந்தையையே

...மனனே பொறையாம் அறிவால் அரிவாய் அடியோடும் அகந்தையையே. - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி

ஓதியது எப்பொருள்?

நாதா, குமரா நம என்று அரனார் ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்? - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி 

கதிகாண

விதிகாணும் உடம்பை விடா வினையேன் கதிகாண மலர்க் கழல் என்று அருள்வாய்? - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி 

சிங்கார மடந்தையர் தீநெறி

சிங்கார மடந்தையர் தீநெறி போய் மங்காமல் எனக்கு வரம் தருவாய் - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி 

என்று விடப் பெறுவேன்?

சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும் விந்தாடவி என்று விடப் பெறுவேன் - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி 

பாழ்வாழ்வு எனும் இப் படுமாயை

பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே வீழ்வாய் என என்னை விதித்தனையே தாழ்வானவை செய்தன தாம் உளவோ? வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே. - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி 

அறிவார் அறிகின்றது

ஒவ்வாதது என உணர்வித் ததுதான் அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால் எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி 

மாயையில் இட்டனை

இல்லே எனும் மாயையில் இட்டனை நீ பொல்லேன் அறியாமை பொறுத்திலையே - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி

வெறும்தானாய் நிலை நின்றது

யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே. . - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி 

மின்னே நிகர் வாழ்வு

மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான் என்னே விதியின் பயன் இங்கு இதுவோ? - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி 

ஆதாரம் இலேன்

ஆதாரம் இலேன், அருளைப் பெறவே நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி

வினை வாழ்வை உகந்து

மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து ஐயோ, அடியேன் அலையத் தகுமோ? - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி

அறியாமையினால் முடியக் கெடவோ?

அடியைக் குறியாது அறியா மையினால் முடியக் கெடவோ? முறையோ? முறையோ? - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி

கருதா மறவா நெறி

கருதா மறவா நெறிகாண, எனக்கு இருதாள் வனசம் தர என்று இசைவாய் - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி

உணரா, மறவா

உதியா, மரியா, உணரா, மறவா, விதி மால் அறியா விமலன் புதல்வா - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி

பேராசை எனும் பிணி

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு ஓரா வினையேன் உழலத் தகுமோ? - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி 

ஐவாய் வழி செல்லும் அவா

...மனனே, ஒழிவாய் ஒழிவாய் மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம் ஐவாய் வழி செல்லும் அவாவினையே - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி

உரு அன்று, அரு அன்று

உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று, இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே. - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி

சும்மா இரு

சும்மா இரு, சொல் அற .. என்றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே. - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி

மங்கையர் மையல் வலை

மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப் பட்டு, ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்? - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி.

சகமாயையுள் நின்று

அகம் ஆடை, மடந்தையர் என்(று) அயரும் சகமாயையுள் நின்று தயங்குவதே. - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி

பொருள் ஆவது?

வானோ? புனல் பார் கனல் மாருதமோ? ஞானோ தயமோ? நவில் நான் மறையோ? யானோ? மனமோ? எனை ஆண்ட இடம் தானோ? பொருளாவது சண்முகனே. - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி

என்னை இழந்த நலம்

எல்லாம் அற, என்னை இழந்த நலம் சொல்லாய், முருகா சுரபூ பதியே. - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி

தீய பக்தி யியற்கையும் வாய்ந்திலேன்

மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்; மற்று மிந்தப் பிரமத் தியல்பினை  ஆய நல்லருள் பெற்றிலன்; தன்னுடை  அறிவி னுக்குப் புலப்பட லின்றியே  தேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினைச் செம்மை யென்று மனத்திடைக் கொள்வதாம்  தீய பக்தி யியற்கையும் வாய்ந்திலேன்; சிறிது காலம் பொறுத்தினுங் காண்பமே. - பாரதி - சுயசரிதை

எனக்குளே சிறக்க...

இதய வாரிதிக்குள் உறவாகி  எனக்குளே சிறக்க அருள்வாயே. - அருணகிரிநாதர் - திருப்புகழ் - கதிர்காமம்