தீய பக்தி யியற்கையும் வாய்ந்திலேன்

மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்; மற்று மிந்தப் பிரமத் தியல்பினை 
ஆய நல்லருள் பெற்றிலன்; தன்னுடை 
அறிவி னுக்குப் புலப்பட லின்றியே 
தேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினைச் செம்மை யென்று மனத்திடைக் கொள்வதாம் 
தீய பக்தி யியற்கையும் வாய்ந்திலேன்;
சிறிது காலம் பொறுத்தினுங் காண்பமே.

- பாரதி
- சுயசரிதை

Comments